சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கையில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், காயம் காரணமாக ருதுராஜ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் செயல்படுவார் என்றும் அவர் அறிவித்தார்.