திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு ஆயிரம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள் பால் காவடி எடுத்தும், மயில் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து, பக்தர்களால் எடுத்துவரப்பட்ட ஆயிரம் லிட்டர் பால் கொண்டு உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.