சென்னை பாடியில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் 443 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகளைக் கையாடல் செய்த இரு ஊழியர்களைப் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர், தனியார் நகைக் கடையில் பணியாற்றி வந்தனர்.
இவ்விருவரும் நகைகளைக் கையாடல் செய்தது தொடர்பாகக் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 64 கிராம் எடை கொண்ட தங்க, வைர நகைகளைப் பறிமுதல் செய்தனர்.