டெல்லியில் புழுதிப் புயல் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியது. மரங்கள் முறிந்து வாகனங்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், புழுதிப் புயல் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
அதேபோல் புழுதிப் புயலின்போது, மதுவிகார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.