பாரத மாதா சேவையில் அண்ணாமலையின் சிறந்த இன்னிங்ஸ் தொடரும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அணணாமலை நல்ல காரணங்களுக்காக களமிறங்கியதாகவும், தற்போது மேலும் சில நல்ல காரணங்களுக்கு அவர் வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.
அண்ணாமலைக்குள் இருக்கும் காரியகர்த்தா உணர்வு அதை சாத்தியமாக்கியுள்ளதாகவும், தமிழக பாஜகவை துடிப்பான அணியாக மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாரத மாதா சேவையில் அவரின் சிறந்த இன்னிங்ஸ் தொடரும் என்றும் பிஎல்.சந்தோஷ் கூறியுள்ளார்.