குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10-ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல்நாளில் 30 கோடியே 90 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.