அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள அனுமன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழகம் மற்றும் கேரளாவில் மார்கழி மாதத்தில் அமாவாசையும், மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், பிற மாநிலங்களில் பங்குனி மாதம் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியை கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, டெல்லியில் உள்ள ஸ்ரீ மார்கத்வேல் அனுமன் பாபா கோயிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மத்தியப்பிரதேச மாநிலம், பந்தூர்னா பகுதியில் உள்ள அனுமன் கோயிலில் அதிகாலை சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.