சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி மர யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட விழாவை ஒட்டி கடந்த 6-ம் தேதி தங்கக்கொடி மரத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அந்தவகையில், விழாவின் ஆறாம் நாளன்று வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், மர யானை வாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.