மியான்மரில் மீட்பு பணிகளுக்காக ரோபோ மற்றும் சிறிய ரக டிரோன்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
அந்த ரோபோக்கள் குடியிருப்புகளில் புகுந்து மீட்பு பணியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த மியான்மருக்கு, ஆப்பரேஷன் பிரம்மா திட்டத்தின் கீழ் இந்தியா உதவி வருகிறது.
இதுவரை 150 டன்கள் அளவில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்ததோடு, 442 டன்கள் உணவுப் பொருள்களையும் மியான்மருக்கு இந்தியா அனுப்பியுள்ளது.