பாஜக மாநில தலைவரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழக பாஜக தலைவருக்கான விருப்ப மனுத் தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மாநில தலைவரை அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெறவுள்ளது.
இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, எல் முருகன் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் தருன் சுக் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.