திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் ஆறாட்டு வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மற்றும் பங்குனியில் ஆறாட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பங்குனி மாத ஆறாட்டு வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து யானையின் மீது சுவாமி எழுந்தருளி காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.