சிவகங்கை அடுத்த நாட்டரசன் கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் பங்குனி அத்த திருவிழா நடைபெற்றது.
நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலில் ஆண்டுதோறும் கம்பன் கழகம் சார்பில் பங்குனி அத்த திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
முன்னதாக அவருக்கு விழாக் குழுவினர் சார்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கம்பரின் பாதத்தில் தாமரை மலர்களை வைத்து வழிபாடு செய்த ஆளுநர் ரவி, கம்பராமாயணம் பாராயணத்தைக் கேட்டு ரசித்தார்.