தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 9 சென்டி மீட்டர் மழையும், ராமேஸ்வரம், அறந்தாங்கி, பேச்சிப்பாறையில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.