போட்டி நிலவும் ஊடகத்துறையில் தனக்கென்று ஒரு பாணி அமைத்து, நேர்மையான வழியில் செல்லும் ஒரே தொலைக்காட்சி தமிழ் ஜனம் தொலைக்காட்சி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பேசியவர்,
இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வைக் கொண்டாடும் நிருவாக இயக்குனர், ஆசிரியர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு ஊடகமும் தனக்கென தனி குணாதிசயங்களை கொண்டிருக்கும் நிலையில் ஆனால் தமிழ் ஜனம் தேசம், தெய்வம், தாய்மொழி தமிழே முன்னிலைப்படுத்துவது பெருமைப்படக்கூடியது என அவர் தெரிவித்தார்.
முத்துராமலிங்க தேவர் ஐயாவின் வார்த்தைகளான தேசத்தையும் தெய்வத்தையும் ஒன்றாகக் கொண்டுள்ள தமிழ் ஜனம் அவரை போலப் பெரிதாகப் புகழ் பெறும் என அவர் தெரிவித்தார்.
எனக்கு நெஞ்சு வலி எனச் செய்தி போட்டு உண்மையில் எனக்கு தலை வலி கொடுத்து விட்டனர். உங்களுக்கு என நியதி உள்ளது அதனைப் பின்பற்றுங்கள் என அவர் தெரிவித்தார்.
வித்தியாசமாகச் செய்தி தர வேண்டும் எனப் போட்டி நிலவுகின்ற ஊடகத்துறையில் தனக்கென்று ஒரு பாணி அமைத்து அதுவும் நேர்மையில் சரியான வழியில் செல்கின்ற ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சி கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது, மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.