மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மேற்கொண்ட மதிப்பீட்டில், தஞ்சாவூர் மாநகராட்சி தேசிய அளவில் 14வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது என மேயர் சன். ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ராமநாதன், தஞ்சாவூர் மாநகரில் குடிநீர், பாதாள குழாய்கள் உடைதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்குக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீர்வு காணப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் நீர் இருப்பும் கண்காணிக்கப்பட்டு தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் கூறினார்.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மேற்கொண்ட மதிப்பீட்டில், தஞ்சாவூர் மாநகராட்சி தேசிய அளவில் 14வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது என்றும், இதற்கான விருது விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.