சென்னை பல்லாவரம் அருகே மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மீது பெண்கள் பூக்களைத் தூவியதால் ஆத்திரமடைந்த அமைச்சர் அன்பரசன், திமுக நிர்வாகியைக் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலை பகுதியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடம், ஆரம்பச் சுகாதார மையத்தை அமைச்சர் தாமோ அன்பரசன், எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் திறந்து வைத்தனர்.
முன்னதாக விழாவிற்கு வருகை தந்த இருவரையும் வரவேற்பதற்காக திமுக பகுதி கழக செயலாளர் ஜெயக்குமார், பெண்களுக்கு 200 ரூபாய் கொடுத்து கூட்டம் சேர்த்ததோடு, பெண்களின் கைகளில் பூக்களைக் கொடுத்துத் தூவ சொல்லி உள்ளார்.
ஜெயக்குமார் சொன்னதுபோல் பூக்களை தூவியதால், ஆத்திரமடைந்த அமைச்சர் அன்பரசன், திமுக நிர்வாகியைக் கண்டித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.