திருச்சி மாவட்டம் குமார வயலூர் முருகன் கோயிலில் பக்தரை, துணை காவல் கண்காணிப்பாளர் ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
பங்குனித் திருவிழாவை ஒட்டி திரளான பக்தர்கள் முருகன் கோயிலுக்கு வருகை தந்தனர். அப்போது சுவாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் வரிசையில் நின்ற பக்தர் ஒருவர், போலீசாரிடம் சென்று வெயில் அதிகமாக இருப்பதாகவும், மக்களை உள்ளே அனுப்புங்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த துணை காவல் கண்காணிப்பாளர் பழனி என்பவர், ஒருமையில் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.