சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது மிரர் பந்து விழுந்ததில் அவர் காயமடைந்தார்.
இந்த திரையரங்கில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தை பெண் ஒருவர் பார்த்து கொண்டிருந்தார். அப்போது கண்ணாடி பந்து விழுந்ததில் அவர் காயமடைந்தார்.
இதையடுத்து மிரர் பந்தை முறையாகப் பொருத்தவில்லை எனக்கூறி உறவினர்கள் திரையரங்க ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.