பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் பொறுப்பேற்பு விழாவில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டார். கிஷண் ரெட்டியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.
அத்துடன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டதால் அண்ணாமலை இனிமேல் காலணி அணிய வேண்டும் என நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தினார். அதனை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வழங்கிய காலணிகளை அணிந்து கொண்டார்.