குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் தங்கும் மாளிகையில் தங்களை தங்க வைத்த ஆளுநருக்கு தமிழறிஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
67 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கம்பராமாயணத்தை தனது சொந்த செலவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் பதிப்பித்தார். தமிழறிஞர்களை அழைத்து அவர்கள் மூலம் புதிய பதிப்பை வெளியிட்டார்.
இதற்காக தமிழறிஞர்கள் சரஸ்வதி ராமநாதன், மா.ராமசாமி, மரபின் மைந்தன் முத்தையா மற்றும் இலங்கையைச் சேர்ந்த 2 தமிழறிஞர்கள் சென்னை ராஜ்பவனுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரையும் சிறப்பாக வரவேற்று உபசரித்த ஆளுநர் ஆா்.என்.ரவி, பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் தங்கும் மாளிகையில் தமிழறிஞர்களை தங்க வைத்தார்.
இதனால் நெகிழ்ந்து போன தமிழ் அறிஞர்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது, தமிழறிஞர்கள் யாருக்கும் குறைவானவர்கள் இல்லை எனவும், பிரதமர் மோடியும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர் எனவும் ஆளுநர் கூறினார்.