பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை கிருஷ்ணகிரி பாஜக-வினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் நகர பாஜக தலைவர் விமலா தலைமையிலான பாஜக-வினர், பட்டாசுகள் வெடித்தும், அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர துணை தலைவர் ரவிகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக கொண்டாட்டம் நடைபெற்றதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.