தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சென்னையில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் செல்வதால், சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் 2 கிலோமிட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.