கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தில் பாரம்பரிப்பு பணி நடைபெறவுள்ளதால் 5 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சூரிய உதயம், முக்கடல் சங்கமம் உள்ளிட்ட இயற்கை அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக, தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கண்ணாடி கூண்டு பாலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதாகவும், இதனால் கண்ணாடி பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.