திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நியூ டவுன், செட்டியப்பனூர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.