கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சொத்துக்காக பெற்ற மகன்களே தந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே மெட்டுவாலி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், சொத்துகளை பிரிப்பில் தந்தைக்கும், மகன்களுக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது.
தனது காலத்திற்கு பிறகு சொத்துகளை பிரித்து கொள்ளுங்கள் என தந்தை கூறியதால் ஆத்திரமடைந்த மகன்கள், தந்தையின் கை, கால்களை கட்டி சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.