புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் மக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர்.
பொன்னமராவதி அருகே உள்ள மேலமேலநிலை கிராமத்தில் உள்ள கண்மாயில் மழை பெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
காலை 6 மணி அளவில் ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் சூடம் ஏற்றி வெள்ளை துண்டை வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதனை அடுத்து மக்கள் மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.