வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமியார் ஒருவர் மரத்தில் ஏறியும், கிளைக்கு கிளை தாவியும் அருள்வாக்கு கூறியதால் பெண்கள் பக்தி பரவசமடைந்தனர்.
ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு 108 பால் குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, சாமியாடிய நபர், மரத்தில் ஏறியும், கிளைக்கு கிளை தாவியும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.