தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் லட்டு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சேலம் – பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் விசு பண்டிகையின்போது, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. சொர்ணபுரியில் உள்ள கே.பி.என். அலுவலகத்தில் லட்டு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக ஆசிரம தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் பாதத்தில் ஒரு ரூபாய் நாணயங்கள் வைத்து பூஜை செய்யப்படும் என்றும், பின்னர் தரிசத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் மற்றும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.