சூப்பர் பவர் இந்தியா : சூரிய மின் உற்பத்தியில் உலகில் மூன்றாம் இடம்!
Jul 6, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சூப்பர் பவர் இந்தியா : சூரிய மின் உற்பத்தியில் உலகில் மூன்றாம் இடம்!

Web Desk by Web Desk
Apr 13, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து இந்தியா புது சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய மின்சார உற்பத்தியில்  ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, இந்தியா சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உள்கட்டமைப்பின் மிக முக்கிய கூறுகளில் மின்சாரம் ஒன்றாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கும் மிக முக்கியமானதாகும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துவரும் இந்தியா, போதுமான மின்சார உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மலிவு விலையில் தடையற்ற மின்சார வழங்குவதற்காக, நாடு முழுவதும் ஒன்றிணைந்த மின் விநியோக வலையமைப்பு மற்றும் ஒற்றை தேசியமின் இணைப்பை உருவாக்குதல் என மத்திய மின்துறை அமைச்சகம் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

நாட்டின் மின்சார தேவை வேகமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  2030ம் ஆண்டுக்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக,  இந்தியா 9.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு,தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான உலகளாவிய மின் உற்பத்தி பற்றிய  அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. உலக எரிசக்தி சிந்தனைக் குழுவான  Ember’s Global Electricity Reviews ((எம்பரின் குளோபல் எலக்ட்ரிசிட்டி ரிவியூவின்)) ஆறாவது அறிக்கையாகும்.

உலகளாவிய மின்சார தேவையில் 93 சதவீதத்தை 88 நாடுகளே உற்பத்தி செய்கிறது. இந்த நாடுகளின் மின் உற்பத்தி மற்றும்  215 நாடுகளுக்கான வரலாற்றுத் தரவுகளையும் இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.  கடந்த ஆண்டு, உலகளாவிய மின்சார உற்பத்தியில் 15 சதவீத மின்சாரம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற பசுமை ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. அதில், இந்தியாவின் பங்கு 10 சதவீதமாகும்.

மேலும், உலக மின்சார உற்பத்தியில், 40.9 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணுசக்தி உள்ளிட்ட குறைந்த கார்பன் மூலங்கள் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலக மின்சார உற்பத்தி 85 ஆண்டுகளுக்குப் பிறகு 40 சதவீதத்தை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

உலகளவில் 858 டெராவாட் மணிநேரங்கள் புதுப்பிக்கத்தக்க(Renewable) ஆற்றலால் உற்பத்தி செய்யப்பட்டது. இது கடந்த 2022ஆம் ஆண்டை விட 49 சதவீதம்  அதிகமாகும். இந்தியாவில் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 22 சதவீதம் சுத்தமான எரிசக்தி மூலம் கிடைத்துள்ளது. இதில்  நீர் மின்சாரம் 8 சதவீதத்துடன் அதிக பங்களிப்பை அளித்துள்ளது. அதே நேரத்தில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் கிடைத்த மின்சாரத்தின் பங்கு 10 சதவீதமாகும்.

உலகளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி இருமடங்கு அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 474 TWh மின் சக்தி சூரிய சக்தியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 24 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தியாவின் 7 சதவீத  மின் உற்பத்தி சூரிய சக்தி மூலமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.

உலகளாவிய ஆற்றல் மாற்றத்தின் முக்கிய சக்தியாகச் சூரிய சக்தி மாறியுள்ளது. உலகில் மின்சாரத் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகளாவிய மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய மின்சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சார உற்பத்தி என்பது ஆசியாவில் சுத்தமான எரிசக்தி மாற்றத்தை வேகப்படுத்தியுள்ளது. குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வளர்ச்சியில்  இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவை “சூரிய சக்தி சூப்பர் பவர்” என கூறியுள்ள (Climate change leader) காலநிலை மாற்றத் தலைவர் சைமன் ஸ்டீல், பசுமை ஆற்றல் வளர்ச்சியில் இந்தியா முழுமையாக ஈடுபடுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: இந்தியாSuperpower India: Third in the world in solar power generation!சூரிய மின் உற்பத்திசூப்பர் பவர் இந்தியா
ShareTweetSendShare
Previous Post

தமிழ் புத்தாண்டு – சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் லட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

Next Post

உதகை மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies