ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த நிலையில், 17 புள்ளி 3 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.