மாமல்லபுரம் அருகே மே 11-ம் நடைபெறும் முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான பணிகளை அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டார்.
பாமக பொருளாளர் திலகபாமா, பாமக துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
மாநாட்டு திடல் அமைக்கும் இடங்கள், பார்க்கிங் ஏரியா வசதி ஆகியவை குறித்து அன்புமணி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.