சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மகளிடம் மர்ம நபர்கள் செயின் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
வழிப்பறி சம்பவத்தின் போது நிலைதடுமாறி கீழே விழுந்த தாயும், மகளும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.