சூடானில் உள்ள முகாம்களில், துணை ராணுவப்படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ராணுவம், துணை ராணுவம் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு தர்புர் மற்றும் எல் பஷார் ஆகிய பகுதிகளில் மக்கள் தங்கியுள்ள முகாம்கள் மீது துணை ராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணிகள், குழந்தைகள்,மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாக உள்ளது.