தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் ஐயப்பா ஆசிரfமத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை வழிபட்டு செல்கின்றனர்.
சேலம் சாஸ்தா நகர் ஐயப்பா ஆசிரமத்தில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் விசு கனி காணுதல் தரிசனம் நடப்பது வழக்கம். தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் இன்று வழக்கத்திற்கு முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் காய்கனிகள் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விசு கனி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். காலை ஆறு முப்பது மணி நிலவரப்படி 10,000 பக்தர்கள் தரிசனத்தை முடித்துள்ளனர்.
பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகியவற்றை பிரசாதமாக பெற்று செல்கின்றனர்.
கோவில் மூலஸ்தானம் துவங்கி பெங்களூர் பைபாஸ் வரையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இதனையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.