அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அங்குள்ள அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.