விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு ஆளுமைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் விஜய பாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி, வானவில் க.ரவி, ப்ரக்ஞா ப்ரவாஹ் தென்பாரத அமைப்பாளர் விஸ்வநாதன், விஜய பாரதத்தின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பாஜக மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் எழுத்தாளர் சேக்கிழார் தொகுத்த விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டாவது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கலைமகள் பத்திரிக்கையின் ஆசிரியரான கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனுக்கு உ.வே.சா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறந்த எழுத்தாளருக்கான பாரதி விருது, தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவரான வெங்கடேசனுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான பாரதி விருது மகாதேவனுக்கும், சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது ஹரன் பிரசன்னாவுக்கும் வழங்கப்பட்டது.