அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், ப்ரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பினரிடம் வரவேற்பைப் பெற்ற இப்படம், 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.