ஈரோடு அருகே தவெகவினர் பட்டாசு வெடித்தபோது சுமை தூக்குவோர் சங்க குடிசையில் தீ விபத்து ஏற்பட்டது.
அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே தவெகவினர் சார்பில் நீர் மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டது.
இதனைத் திறந்து வைக்க அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக தவெகவினர் பட்டாசு வெடித்தபோது, அருகிலுள்ள சுமை தூக்குவோர் சங்க குடிசையில் பட்டாசு விழுந்தது.
இதையடுத்து குடிசை மளமளவென எரியத் தொடங்கியதால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.