ஆம்பூர் அருகே கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் காட்டுக்கொல்லை பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் இருந்து எம்.சான்ட் கொண்டு வரப்பட்டு விவசாய நிலங்களுக்கு அருகே கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், குவாரி உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.