சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்துவ மதபோதகர் ஜான் ஜெபராஜை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்த மத போதகரான ஜான் ஜெபராஜ், கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, தலைமறைவான ஜான் ஜெபராஜை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மூணாறில் பதுங்கியிருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
காந்திபுரம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், நீதிபதி நந்தினி தேவி வீட்டுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதி, மத போதகர் ஜெபராஜை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.