கர்நாடகாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
கொப்பாள் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் சாக்லெட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குற்றவாளியைப் பிடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், பீகாரைச் சேர்ந்த ரித்தேஷ் குமார் என்பவர் குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யச் சென்றபோது அந்த இளைஞர் தாக்குதல் நடத்தியதால், போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர்.