ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது தலைமையிலான கமிட்டியில் விவிஎஸ் லட்சுமண், ஹமித் ஹசன், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ், பவுமா, ஜோனாதன் டிராட் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கமிட்டியானது சர்வதேச போட்டியின் விதிமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஐசிசிக்கு பரிந்துரை செய்யவுள்ளது.