சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, ஏற்காட்டிற்குத் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக ஏற்காடு ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள ரம்மியமான இயற்கை சூழலை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.