சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ராமநகர் பகுதியில், 3 கண்டெய்னர் லாரிகளில் தாய்மாமன் சீர் கொண்டு செல்லப்பட்ட காட்சி காண்போரை வியக்கச் செய்தது.
மேட்டூரை அடுத்த கந்தனுர் பகுதியை சேர்ந்த பாலாஜி மேகலா தம்பதியின் மகள் யாழினியின் பூப்புனித நீராட்டு பொன்னேரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்காக, யாழினியின் தாய்மாமன் சவுந்தர்ராஜன் என்பவர் மூன்று கண்டெய்னர் லாரிகளில் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாகக் கொண்டு சென்றார்.
இதுமட்டுமின்றி காளை மாடுகளையும் சீராகக் கொடுப்பதற்காக, மேளதாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் மண்டபத்திற்குக் கொண்டு சென்றார்.