சேலத்தில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காகப் பேருந்துகள் திருப்பி விடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கோட்டை சிஎஸ்ஐ பள்ளியில் 2 நாட்களாக ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்ட நிலையில், நிகழ்ச்சிக்குப் பொதுமக்களை அழைத்துவர அரசு பேருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டன.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.