புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் தமிழ் புத்தாண்டையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப் பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளைச் சாலையின் இரு புறமும் திரண்டிருந்தோர் கண்டு ரசித்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.