கும்பகோணத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இது தொடர்பாக அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், அமைச்சர் கோவி.செழியனின் அலுவலகம் உள்ளிட்ட எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.