ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்த காரணத்தால், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் பண்ணாரிக்கு இயக்கப்பட்டன.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள மோளகாளிபாளையம் பகுதியை சேர்ந்த ஆறுபடை பக்தர்கள் குழுவினரின் காவடி ஆட்டம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.