பாஜக – அதிமுக கூட்டணியின் ஒற்றை குறிக்கோள் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதுதான் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“அம்பேத்கரை ஒடுக்கப் பார்த்த காங்கிரஸ் கட்சியின் செயல்களை அரங்க கூட்டம் அமைத்துப் பேசுவோம் என்றும் அம்பேத்கருக்கு மணிமண்டபம் அமைத்து அவரது புகழை உலகறிய செய்த கட்சி பாஜக என வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.
அம்பேத்கரைப் பெருமைப்படுத்த நாட்டின் பணப்பரிமாற்ற செயலிக்குப் பிரதமர் பீம் ஆப் என பெயரிட்டார் என்றும் கோவையின் கட்டமைப்பை மேம்படுத்தத் தொடர்ந்து பணியாற்றுவேன் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக பாரத ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார் என்றும் புதிய மாநில தலைவர் எங்களைச் சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் எனக்குப் பதவிகள் மீது ஒருபோதும் ஆசை இருந்ததில்லை என வானதி ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.
மாநில பதவியைத்தாண்டி தேசிய பதவியில் என்னை அமரவைத்து அழகு பார்த்த கட்சி பாஜக என்றும் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதே பாஜக – அதிமுக கூட்டணியின் ஒற்றை குறிக்கோள் என்றும் கூட்டணி ஆட்சி குறித்து எங்கள் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.