பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான்கான் வசிக்கும் மும்பையின் பந்த்ரா இல்லத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது ஓராண்டு கழித்து, மும்பையின் போக்குவரத்துத் துறைக்கு வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.
அதில், சல்மான் கானை அவரது இல்லத்தில் குண்டு வைத்து கொலை செய்து விடுவோம் எனவும், வாகனத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனர்.